2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மனைவி கொலை; கணவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியில் மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்ற கணவன், இன்று வியாழக்கிழமை (31) காலை  சடலமாக  மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

05 பிள்ளைகளின் தந்தையான  செல்லையா இராசேந்திரம் (வயது 46) என்ற இந்தச் சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில்; காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலகர் பிரிவில்  சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மனைவியான இ.அமுதா (வயது 38) என்பவர் அரபு நாடொன்றில் பணியாற்றிவிட்டு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை (30) இரவு உறக்கத்திலிருந்த இவரது மனைவியின்  தலையில்  கோடரியால் அவரது கணவர் வெட்டியுள்ளார்.

இதை தடுக்கவந்த மனைவியின் தந்தை வீ.வெள்ளைச்சாமி, தாய் வெ.கிருஸ்ணவேனி ஆகியோரையும் மேற்படி நபர்  கோடரியால் வெட்டியதுடன், அங்கிருந்து   தலைமறைவாகியுள்ளார்.

இதனை அடுத்து, கோடரி வெட்டுக்குள்ளான மூவரும்   அயலவர்களின் உதவியுடன் வவுனியா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், மேற்படி நபரின் மனைவி உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம்  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X