2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலத்தை  மாதம்பை, பனிரெந்தாவ வனாந்தரப் பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மீட்டதாக  மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை, பூக்குளம் பிரதேசத்தில் வசித்த சீ.பி.சத்துர வீரதுங்க (வயது 25) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது. பொறியியல் பாடநெறியை பயின்ற இவர்,  தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

தனது மகன் கடந்த 31ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சடலமாக மீட்கப்பட்ட  இளைஞரின் பெற்றோர் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்றையதினம் வனப் பாதுகாப்பு பணியாளர்கள் சிலர் பனிரெந்தாவ வனாந்தரப் பகுதியில் பயணப் பையொன்றையும் தேசிய அடையாள அட்டையொன்றையும்; கண்டெடுத்ததுடன், இது தொடர்பில்  மாதம்பை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த அடையாள அட்டை காணாமல் போன இளைஞர் உடையது என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்ததுடன், இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட  தேடுதலின்போது இவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அருகில் காணப்பட்ட உடைகளைக் கொண்டு அது காணாமல் போன தமது மகனுடையது என பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.

இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X