2025 ஜூலை 16, புதன்கிழமை

சந்திவெளி வாவியிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியிலிருந்து சந்திவெளி, கண்ணகை அம்மன் கோவில் வீதியில் வசித்துவந்த ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை (வயது 66) என்பவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு  மீட்கப்பட்டதாக அப்பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் பி.மேகலா தெரிவித்தார்.

ஆடு கட்டுவதற்காக களப்பின் மறுகரையிலுள்ள திகிலிவெட்டை கிராமத்துக்கு போவதாக இவர் வீட்டாரிடம் கூறிவிட்டு நேற்றையதினம் (26) சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் (26) இரவு சந்திவெளி களப்பில் மீன்பிடிப்பதற்குச் சென்ற இவரது மகன்,   தோணியொன்று அநாதராவாக கிடப்பதையும் தனது தந்தை  உயிரிழந்து  களப்பில் மிதப்பதையும் கண்டார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய மீனவர்களின் உதவியுடன் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .