2025 ஜூலை 16, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு அபராதம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவேறு நபர்களுக்கு ரூபாய் 21,000 தண்டப்பணம் விதித்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.முகமது தீப்பளித்தார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன் சாரதி அனுமதிரம், வாகனத்திற்கான வருடாந்த அனுமதிப்பத்திரம், காப்புறுதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நிலையில் அக்கரைப்பற்று மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் புதன்கிழமை(27) கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்போது நீதவான் மேற்படி நபருக்கு ரூபா 13,500 தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மேலும், குறித்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்குமாயின் அதனை இரத்து செய்வதற்கு மோட்டார் வாகான போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு அறிவிப்புச் செய்யுமாறும் நீதவான் கட்டளை பிறப்பத்தார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் பயிற்சி பெறும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துக் கொண்டு மதுபோiயில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டிற்காக புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ரூபாய் 7,500 தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .