2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவன்கேணி, சிங்காரத்தோப்பு பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து  ஆறுமுகம் பேரின்பம் (வயது 64) என்பவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (07)  காலை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு சார்ஜன்ட்; ஏ.இஷட்.ஹஸன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வீட்டிலிருந்த இவர், சனிக்கிழமை (06) நள்ளிரவிலிருந்து  காணாமல் போயுள்ளார். இவரைத் தேடியபோது வளவொன்றில் இவர் சடலமாகக் கிடந்ததாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.


  Comments - 0

  • MSM.NASIR Sunday, 07 September 2014 06:22 AM

    பிரேதப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    (மரண விசாரணை அதிகாரி நஸீர் )

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X