2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மரணம்

George   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று புதன்கிழமை (10)  துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருதாவது,

காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் குறித்த சிறுமி, அயலவர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் மட்டகளப்பு போதானா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்யதாக சந்தேகிக்கப்படும் நபரின் சகோதரியின் வீட்டிலிருந்தே குறித்த சிறுமி உணர்விழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் இன்று மழை பெய்துள்ளது. இதன்போது, சிறுமியின் வீட்டுக்கு வந்த குறித்த அயலவருக்கு சிறுமியின் தாய் குடையொன்றை கொடுத்ததுடன், குடையை வாங்கி வருமாறு கூறி சிறுமியையும் அனுப்பியுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததையடுத்து, சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பை ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
 
சிறுமி உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் மரணம் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X