2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முந்தலில் குடும்பஸ்தர் கொலை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மங்களவெளி, அம்பளவெளிப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு  ஒன்றில் நேற்று திங்கட்கிழமை  பகல் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பத்துளுஓயா, தாரவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய 03  பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 20 வயதுடைய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் அத்தோட்டத்தின் மேற்பார்வையாளரான கொலை செய்யப்பட்டவருக்கும் மேற்படி யுவதியின்; காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலின்போது யுவதி கூரிய ஆயுதத்தால் குத்தியதாலேயே இவர் மரணமடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்   யுவதியையும் அவரது காதலைனையும் கைதுசெய்துள்ளதோடு, இவர்களிடம்  விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .