2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியிலுள்ள குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இடத்தைச் சேர்ந்த நரியான் சின்னத்துரை (வயது 77) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதற்காக திங்கட்கிழமை (05) மாலை சென்ற இவர், வீடு திரும்பவில்லையென இவரது உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இந்நிலையில், மேற்படி குளத்தில்  இவரது சடலம் செவ்வாய்க்கிழமை (06) காலை மிதந்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி என்.தியாகராஜா. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X