2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பேய்பிடித்த பெண்ணின் தலையில் கொதிக்கும் பாலை கொட்டிய பேயோட்டி

Kanagaraj   / 2015 ஜனவரி 19 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு குழந்தைகளின் தாயொருவரின் உடம்புக்குள் பேய் புகுந்துள்ளதாகக் கூறி அந்த பேயை விரட்டுவதற்காக மூன்று பானைகளில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் தேங்காய்ப்பாலை அந்த தாயின் தலையில் கொட்டிய பேயோட்டி ஒருவர் உட்பட மூவரை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று வேயங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொதிக்கும் தேங்காய்ப்பால் ஊற்றியதால்  காயங்களுக்கு உள்ளான தாய், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான பேயோட்டியும் அவருக்கு ஒத்துடைப்பு வழங்கிய 60 வயதான பெண்ணொருவரும் 38 வயதான ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .