2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பில் சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கறுப்புப்பாலம் ஆற்றிலிருந்து கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுந்தரம் மகேந்திரராஜா (வயது 27) என்பவரின் சடலம்  புதன்கிழமை (18) காலை  மீட்கப்பட்டதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இந்த இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து காணாமல் போனதாக  அவரின் சகோதரி தெரிவித்தார்.  

இதேவேளை, புதிய காத்தான்குடி பதுறியா மோதினார் ஒழுங்கையைச்  சேர்ந்த பாறூக் முஹம்மது றிகாஸ் (வயது 17)  என்பவரின் சடலம் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X