Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி ஈரலக்குளத்தை சேர்ந்த நல்லதம்பி விஜிகரன் (வயது 20) என்பவரின் சடலம், சந்தனமடு ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள இடகாலி ஆற்றில் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய நடவடிக்கைக்காக தனது குடும்பத்தவர்களுடன் ஈரலக்குளம் கிராமத்தில் இந்த இளைஞர் தங்கியிருந்தபோது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், இவரை பல இடங்களிலும் தேடியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை இடகாலி ஆற்றில் சடலமொன்று மிதப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்று பார்வையிட்டபோது, அது தனது மகன் என்பதை அடையாளம் கண்டதாக பெற்றோர்; தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago