Suganthini Ratnam / 2015 மார்ச் 04 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள பிஸ்சி ஒழுங்கையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை புதன்கிழமை (4) மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி ஒழுங்கையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் உணவகமொன்றை நடத்திவருபவரான வடிவேலழகன் (வயது 45) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், 7 இற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளையும் இப்பகுதியிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
17 minute ago
25 minute ago
30 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
30 minute ago
46 minute ago