Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 05 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிண்ணயடி கிராம சேவகர் பிரிவில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எல்.அமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும் ஒரு ஆணுமாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிவன் கோவில் வீதி கொலக்கட்டான் கிண்ணயடி என்ற விலாசத்தில் வசித்து வந்த சுப்ரமணியம் அருண உதயம் (வயது – 34) என்பரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்.
மரணமடைந்த சுப்ரமணியம் அருண உதயம் அவரது தாய் மற்றும் தாயின் இரண்டவது கணவர் மற்றும் சகோதரர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் மது அருந்தி விட்டு அடிக்கடி சண்டை பிடிப்பதாகவும் இவ்வாறே நேற்று இரவும் மது அருந்திவிட்டு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியதில் இக்குடும்பத்தில் உள்ள மகன் கூரிய ஆயுதத்தால் மார்பில் குத்தப்பட்டு ஸ்தலத்திலயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago