2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி வேம்புப் பகுதியிலிருந்து அங்கங்கள் சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கழமை  மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உருக்குலைந்த நிலையில் காணப்படும் இந்த சடலம் 67 வயதுடைய ஏறாவூர் ஏ.கே.எம்.வீதியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை அலியார் வெள்ளத்தம்பியினுடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இவர் சித்த சுவாதீனமுள்ளவர் என்றும் கடந்த 22ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எல்.முனாஸ் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை  எடுத்துச் செல்லுமாறு பொலிஸாரிடம் பணித்தார்.

இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X