2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மட்டு. சிறைக்கைதி சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தைச்  சேர்ந்த அப்துல் ஹரீம் சேகுதாவூத் (வயது 70) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும்  பொலிஸார்  கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X