2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

யுவதியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 17 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பட்டைக்காட்டுப் பிரதேசத்திலுள்ள வீட்டு வளாகத்திலுள்ள  கிணற்றிலிருந்து 18 வயதுடைய யுவதியின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை  காலை மீட்கப்பட்டுள்ளது என்று  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து  காணாமல் போயிருந்த கணரட்னம் லக்சிகா என்பவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு  வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணித்தார்.

இது தொடர்பில்  வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X