2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்கன்னாவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு  இடம்பெற்ற கத்திக் குத்தில் நாரவில குத்தெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த எல்.லயனல் ரத்நாயக்கா (வயது 54) உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

குருகொடெல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு அருகில் வசிக்கும்  ஒருவருடைய வீட்டுக்கு சென்று அவருடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் அவராலேயே கத்தியால் குத்திக் கொண்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் பின்னர் காயமடைந்த அவர் உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அங்கு அவர்  உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X