Suganthini Ratnam / 2015 ஜூன் 16 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் அநாதரவாக கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கும்புறுமூலை காட்டுப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், இந்த சடலத்தை கண்டு அப்பகுதி கிராம சேவகர் ஊடாக தமக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலமாக மீட்கப்பட்டவர் விஷேட தேவையுடையவர் என்றும் செங்கலடி எல்லை நகர் வீதியைச் சேர்ந்த இவர், 1974.10.17ஆம் திகதி பிறந்த கோணலிங்கம் வடிவேல் என்றும் அவரது அடையாள அட்டை மூலம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
25 minute ago
30 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
30 minute ago
46 minute ago