2025 ஜூலை 21, திங்கட்கிழமை

3 உழவு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள் திருட்டு

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி கிராமத்திலுள்ள வீடொன்றின் வளவுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 உழவு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள் திருடப்படட சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மூன்று உழவு இயந்திரங்களினதும் முன் சில்லுகள் (டயர்கள்), மின்கலங்கள் (பெற்றரி), சைலென்சர்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உழவு இயந்திரங்கள் மூன்றையும் வாடகைக்குப் பெற்று மணல் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தி வந்ததாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X