2025 ஜூலை 19, சனிக்கிழமை

4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: முதியவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முதியவரை எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி மாலைநேர ஆங்கில வகுப்பிற்கு சென்றபோது, மாலை நேர வகுப்பு நடைபெறும் இடத்தின் உரிமையாளரான குறித்த முதியவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

முதியவரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதை கண்டவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி வசுந்ரா முதியவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையில், சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஜீவராணி குறித்த முதியவரை எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X