2025 ஜூலை 23, புதன்கிழமை

6 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார், எழுத்தூர் பகுதியில் 6 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலினையடுத்து எழுத்தூர் பிரதான வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தரை கடற்படையினர் இடை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த குடும்பஸ்தரிடம் இருந்த 6 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப்பொருளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பின் கடற்படையினர் குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கொழும்பு போதைவஸ்து தடுப்புப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மேலதிக விசாரணைகளை கொழும்பு போதை வஸ்து தடுப்புப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .