2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

80 லீட்டர் டீசலைத் திருடிய நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
வியாபார நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 80 லீட்டர் டீசலைத் திருடிய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும்  மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.

திரப்பனை தித்தியாகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மோட்டார் வண்டியில் வந்து 80 லீட்டர் டீசலினை திருடியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே மேற்படி நபர் கைது செய்யப்பட்டதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .