2025 ஜூலை 19, சனிக்கிழமை

960 போத்தல் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றல்

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


960 சட்டவிரோத மதுபான போத்தல்களை ஹட்டன் பொலிஸார் இன்று காலை கைப்பற்றியுள்ளனர்.

சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான சட்ட விரோத மதுபான  போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வான் ஒன்றை வழிமறித்தபோது, 'கசிப்பு' எனப்படும் மதுபானம்  உள்ளடக்கப்பட்ட போத்தல்கள் காணப்பட்டதாகவும் அவை தோட்டப்புறங்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டுச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களுடன் வாகனம் மற்றும் சந்தேக நபரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X