Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், கணவன் படுகாயமடைந்த சம்பவம் ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது மனைவியை கணவன் கத்தியால் குத்தியதினால் மனைவி உயிரிழந்துள்ள அதேவேளை, கணவன் தன்னைத்தானே கத்தியால் குத்தி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கண்ணகிபுரம் முதலாம் பிரிவைச் சேர்ந்த மகேந்திரன் கலைச்செல்வி (வயது 18) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இந்த நபர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த இப்பெண்ணை திருமணம் முடித்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக கண்ணகிபுரத்தில் வாழ்ந்துவந்தனர். இந்நிலையில், தனது சொந்த ஊரான கிளிநொச்சியில் இருவரும் வாழவேண்டுமென்று மனைவியை கணவன் பலமுறை வற்புறுத்திவந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்றையதினமும் கணவன், மனைவிக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago