2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கூட்டொப்பந்தத்துக்கு முன்னர் 620 ரூபாய், பின்னர் 590 ரூபாய்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

கூட்டொப்பந்தத்துக்கு முன்னர் நாளொன்றுக்கு 620 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுகொண்டிருந்த தோட்டத்தொழிலாளர்கள், கூட்டொப்பந்தத்துக்குப் பின்னர் நாளொன்றுக்கு 590 ரூபாயைப் பெறவேண்டிய, துர்ப்பாக்கிய நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது என்று பதுளை மாவட்ட எம்.பியான அ.அரவிந்தகுமார் சுட்டிக்காட்டினார். 

அ.அரவிந்தகுமார் சுட்டிக்காட்டினார். 

நாடாளுமன்றத்தில் நேற்றுப்புதன்கிழமை இடம்பெற்ற தொழில் மற்றும் தொழிலுறவுகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு கூட்டொப்பந்தத்தின் ஊடாக தீர்வு காணப்பட்டபோதிலும், ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை தோட்ட நிர்வாகங்கள் மீறுவதனால் சம்பள உயர்வு விவகாரத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கூட்டொப்பந்தத்துக்கு முன்னர் நாள் சம்பளம் 620 ரூபாயாகும். அதன்பின்னர் நாள்சம்பளம் 730 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அந்த 730 ரூபாவில், ஊக்குவிப்பு கொடுப்பனவான 140 ரூபாயும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 140 ரூபாவை வழங்கக்கூடாது என்பதில் தோட்ட நிர்வாகங்கள் தெளிவாகவே உள்ளன. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

நாளொன்றுக்கு 10 கிலோகிராம் கொழுந்தை பறிக்கமுடியும். ஆனால் அந்த கிலோகிராமை தோட்ட நிர்வாகங்கள் அதிகரித்து விட்டே இந்த ஊக்குவிப்பு கொடுப்பான 140 ரூபாவை கொடுக்காமல் விட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .