2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கிராமங்களில் பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன

Kanagaraj   / 2016 நவம்பர் 26 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாரிய பிரச்சினைகள் இருந்தன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்தை பலப்படுத்தும் நோக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளனர். பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்கள் செயற்படுத்துவோம் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உள்நாட்டலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிராமங்களில் பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால், நாட்டில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .