Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 500 ஏக்கர் பரப்புடைய காணியொன்று, சம்பூரில் இருப்பதாகவும் அதை மின்சக்தி உற்பத்திக்கான வலயமாக ஒதுக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
நாடாமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான நளின் பண்டார ஜயமஹ எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பத்திலேயே பிரதி அமைச்சர் பெரேரா இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
“முன்னதாக கேள்வி எழுப்பிய நளின் பண்டார ஜயமஹ எம்.பி, சம்பூரில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் அந்தத் திட்டம் மாற்றப்பட்டிருந்தது. அரசாங்கம் என்ற வகையில் சுற்றுச்சூழல் பற்றி சிந்தித்து நீங்கள் திரவ இயற்கை வாயு திட்டத்துக்கு மாறியுள்ளீர்கள். அந்த வகையில், திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் அல்லது நிலக்கரி அற்ற வேறு ஏதேனும் மின் உற்பத்தி நிலையம் சம்பூரிலும் நிர்மாணிக்கப்படுமா?” என்று, இதன்போது கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர்,
“சம்பூரில் மின்சார சபைக்கு சொந்தமான 500 ஏக்கர் பரப்புடைய காணியொன்று இருக்கிறது. அந்த காணியில் என்ன செய்வதென்று இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும், அந்த வலயத்தை மின்சக்தி உற்பத்தி செய்யும் வலயமாக ஒதுக்கிக் கொள்வதற்கே நாம் உத்தேசித்துள்ளோம். பிரதரும் எமக்கு அதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாம் அது தொடர்பில் செயற்படுவோம்” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
03 Jul 2025