2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தமிழ் பெண் எம்.பிக்கள் மௌனம் காத்தனர்

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ் 

நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில், தமிழ் பெண் எம்.பி.க்கள் எவருமே உரையாற்றவில்லை.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே, பெண் உறுப்பினர்களாவர். அவர்களில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே நேற்றைய விவாதத்தில் உரையாற்றினர்.

இந்த அமைச்சு மீதான குழுநிலை விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிமுதல் 12 மணிவரையிலும் இடம்பெற்றது.

விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். ஈ.பி.டி.பி.யின் எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தாவும் இந்த விவாதத்திலும் உரையாற்றினார்.

13 பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்களில் அறுவர் மட்டுமே, நேற்றைய விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர். எழுவர் உரையாற்றவில்லை. அந்த ஏழு உறுப்பினர்களில்,  சிறுவர் விவகார இராஜங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகிய இருவரும் அடங்குகின்றனமை குறிப்பிடத்தககது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .