2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘நல்லிணக்கத்தைக் குழப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்’

Editorial   / 2017 மே 25 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டில், அண்மைக்காலமாகத் தலைதூக்கியுள்ள இனவாதச் செயற்பாடுகள், நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கப் பயணத்தில் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்று (24) நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் கேள்வியெழுப்பும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாட்டில் மீண்டும் இனவாத நடவடிக்கையைத் தூண்டும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

“அம்பாறை மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைப்பதற்கு முயன்ற செய்த சம்பவத்துடன் இனவாத நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன. இந்தக் காலப்பகுதியில் சுமார் 40 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 

“கடந்த 18ஆம் திகதி, தெற்கிலிருந்து வந்த சிலர் கிளிநொச்சி நகரத்தில், தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் மக்களை குறிக்கும் நிறங்களை அகற்றிவிட்டு கொடியை பறக்கவிட்டுள்ளனர். 

“ இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மீண்டும் அசாதாரண நிலை ஏற்றபடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சூழ்நிலையில் அதனை குழப்பும் வகையில் செயற்படம் இவ்வாறானவர்களுக்கு எதிராக அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .