2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாலியல் கல்வி: ‘உடன் தடைசெய்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“பாடசாலைக் கல்வியை 18 வயது வரை கட்டாயப்படுத்தி, இந்தப் பிள்ளைகளுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு வழிகளைப் போதிப்பது அல்லது ஆணுறை விநியோகத்தை வியாபிப்பது, சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பொருத்தமான தீர்வல்ல” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சுட்டிக்காட்டினார்.

“இதேவேளை, 9ஆம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆபாசப்படங்கள் உடனான பாலியல் கல்வி பாடப்புத்தகம் உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும்” என்றும் கோரிநின்றார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2015 இல், இலங்கையில் 12 -17 வயதுக்குட்பட்ட 20,780 சிறுமிகள் திருமணமுடித்து அல்லது  துணையுடன் சேர்ந்து வாழ்கின்றனர் எனப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

குடும்ப சுகாதார பணியகத்துக்கு அமைய, பதிவுசெய்யப்பட்ட அனைத்து கருவுற்ற தாய்மார்களிலும் 5.3 சதவீதமானோர் பதின்மவயது பெண்களாவார்.  அதேபோல, இலங்கையில் நான்கு பெண்களில் ஒருவர் தமது 18 வயதை அடைவதற்கு முன்னரே பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோல பாடசாலைக் கல்வியை 18வயது வரை கட்டாயப்படுத்தி இந்தப் பிள்ளைகளுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு வழிகளைப் போதிப்பது, அல்லது ஆணுறை விநியோகத்தை வியாபிப்பதும் இதற்கான பொருத்தமான தீர்வல்ல. இதன் மூலம் இலங்கை சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மேலும் மோசமடையலாம் என்றும் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் பிரசுரிப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள ‘பாலியல் கல்வி’ எனும் நூல் மாணவர் அறிவூட்டலைவிடவும் குறிப்பாக கலப்புப் பாடசாலைகளில் பெண் பிள்ளைகள் துன்புறுத்தப்படுத்தலுக்கு வழிவகுப்பதாகவே உள்ளது.

புகைப்படங்கள் ஆபாசமான வகையிலேயே உள்ளன இவ்வாறான பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்னர்,  சமய மற்றும் சமூகத் தலைமைகளுடனான கலந்தரையாடல் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .