2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மரக்கிளையை ஆற்றுப்படுத்தினார் எம்.பி

Kanagaraj   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதம், நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு சற்றுமுன்னர் உரையாற்றிய, கண்டி மாவட்ட எம்.பியான ஆனந்த அளுத்கமகே, புருத்த மரத்தின் கிளையொன்றை சபையில் ஆற்றுப்படுத்தினார். இதனால் சபையில் சிரிபொலி எழுந்தது.

புருத்த மரத்தை வெட்டமுடியாது. அதற்கு அனுமளித்தது யார் என்று தெரியாது என்று சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கத்தின் போது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேயின் வீடு, புருத்த மரத்தினால் கட்டப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதியளித்தது என்று வினவியதுடன், சபையின் அவதானத்து கொண்டு வருவதற்காக அந்த மரத்தின் கிளையை சபைக்கு ஆற்றுப்படுத்துவதாக கிளையொன்றை அவரது மேசையின் மீது வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .