2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

‘மலையக மக்கள் அடிமைகள் அல்லர்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பங்களிப்பு ஆற்றி வரும் மலையக மக்கள் அடிமைகள் அல்லர்.

இலங்கையின் ஆட்சியாளர்கள், மலையக மக்களை அடிமைகளாகப் பயன்படுத்தியுள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன  மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்துக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசாங்கம் நிதி ஒதுக்கிடும் பட்சத்திலேயே, அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றார்.   

இன்று உலக சந்தையில் இலங்கையின் தேயிலை உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியழைடந்துள்ளது. இன்று தேயிலை உற்பத்தியில் 102 சதவீதம் சீனா உற்பத்தி செய்கின்ற நிலையில், இலங்கை 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, இலங்கையின் தேயிலை உற்பத்தி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.   

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க நீங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறு தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா, கென்யா ஆகிய நாடுகள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களில் இருக்கின்ற போது, இலங்கை நான்காவது இடத்திலேயே உள்ளது என்றார்.   

அதனையடுத்து உரையாற்றிய லக்ஸ்மன் யாப்பா, ஆம் முதலாவது இடத்திலிருந்த இலங்கை 5 அல்லது 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதென்றால். இலங்கைத் தேயிலையில் சீனி உள்ளிட்ட பொருட்கள் கலப்பதால் இலங்கைத் தேயிலைக்கான தரம் சர்வதேசத்தில் குறைந்துள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .