Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நாட்டினதும் மக்களினதும் தங்களது சொந்தங்களினதும் நலன்களை பற்றி சிந்தித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை தேடிச் செல்வதை குறைத்துக்கொள்ளுமாறு, நாட்டைவிட்டுச் செல்லும் வைத்தியர்கள் மற்றும் தாதிமாரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாட்டு மக்களின் அபிவிருத்தி எந்தளவில் இருக்கிறது என்பதை, அந்த நாட்டின் சுகாதார நிலையை கொண்டே நிர்ணயிக்க முடியும். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது அதன் பெறுபேறுகள் உடனடியாகக் கிடைப்பதில்லை. அவை நீண்டகால பெறுபேறுகளைத் தருவதாக இருக்கும். நோயற்ற நாட்டை உருவாக்குவதற்கு புதிய வேலைத்திட்டங்கள் தேவை.
“சுகாதார சேவையில் மருத்துவர்கள் மற்றும் தாதிமார் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இது இன்று ஏற்பட்ட நிலைமை கிடையாது. நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினையாகும். பெரும்பாலானோர் நாட்டை விட்டுச் செல்வதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. எந்தளவு தொழிநுட்பம் வளர்ந்தாலும், மனித வள தேவையை ஈடுசெய்துவிட முடியாது.
ஆகவே, மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் நாட்டைவிட்டுச் செல்வதே இதன் பிரதான பிரச்சினையாகியுள்ளது. தாதிமாரையோ அல்லது விசேட மருத்துவ நிபுணர் ஒருவரையோ சில மாதங்களில் உருவாக்கிவிட முடியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025