2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

'நீலப்படங்களை வரியில் பார்த்தனர்'

Kanagaraj   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற, வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரிகள், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தது மட்டுமன்றி, அங்கு நீலப்படங்களை பார்த்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் மக்களின் வரிப்பணமே செலுத்தப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ராஜபக்ஷவின் ஆட்சியில், வெளிவிவகார அமைச்சில் இருந்த அதிகாரிகளில் பலர் இன்னும் இருக்கின்றனர். அந்த அமைச்சை சேர்ந்த ஆண், பெண் அதிகாரிகள் பலர், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தனர். அரச அதிகாரிகளுக்கு அங்கு என்ன வேளை? என்றும் வினவினார். அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இவ்வாறான அதிகாரிகளே, குறிப்பாக பெண் அதிகாரிகளே! வெளிநாடுகளுக்கு சென்று, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து நீலப்படங்களை பார்த்துவிட்டு, அதற்கான கட்டணத்தை மக்களின் வரிப்பணத்திலிருந்து செலுத்தியுள்ளனர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிநின்றார்.

அது அப்படியிருக்க அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது, யன்னலில் எட்டிப்பார்க்க முயன்று தவறிவிழுந்து காயமடைந்த அன்றைய அமைச்சர் ஒருவருக்கு, ஜனாதிபதி நிதியத்திலிருந்து 109 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை வாங்கியவருக்கு வெட்கமில்லை. அவரை யதார்த்தமாக நான் சந்தித்தபோது நீ பிச்சைக்காரனா என்று குறித்த நபரிடமே நான் கேட்டிருந்தேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .