Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
சில மதகுருமார்களின் வெறுப்பு பேச்சுக்களினால், பல்வேறான சிக்கல்கள் எழுந்துள்ளன. மதகுருமார் சிலரின் வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பில், ஜனாதிபதியும் பிரதமரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சரான ஏரான் விக்ரமரத்ன கேட்டுக்கொண்டார்.
தேசிய கலந்துரையாடல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்கும் மத உரிமை காணப்பட்டாலும் அது, இலங்கையர் எனும் கலாசாரத்தின் கீழிருக்க வேண்டும். நாட்டில் எழுந்துள்ள மத ரீதியிலான தீவிரவாதப் போக்கானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும்வகையிலேயே தற்போது அமைந்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் பிரகடனப்ப டுத்தப்பட்டபோதுதான் சமஷ்டி எனும் கோஷம் முதலாவதாக எழுந்தது. அப்போது அதற்குப் பதிலாக மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவது தொடர்பில் பலர் முயற்சித்தார்கள்.
ஏதோ ஒருவகையில் பல தடைகளை நாம் கடந்தே வந்துள்ளோம். இவை அனைத்தும் நல்லிணக்கத்துக்கான பயணமாகவே கருதப்படுகின்றது. இந்நிலையில், மத ரீதியிலான துவேசங்கள், வெறுப்புப் பேச்சுக்கள் என்பவற்றை இல்லாது செய்யாது நாம் நினைக்கும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இதேவேளை, மதரீதியிலான பாதிப்புக்களுக்கு உள்ளடக்கப்பட்டோர் முறைப்பாடளிப்பதற்காக விசேட தொலைபேசி, இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும். 2007 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படி வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடுவது குற்றமாக கருதப்பட்டுள்ளமையால் அதுபோன்ற உரைகளை தடைசெய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
03 Jul 2025