Niroshini / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அங்கிகரிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அதனை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் இடையூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. சிங்கள மொழி ஆதிக்கத்திலிருந்து சில அதிகாரிகள் இன்னும் விடுபடவில்லை. தமிழுக்குரிய அந்தஸ்தை, அங்கிகாரத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் அரச கரும மொழிகளுக்கான அமைச்சு ஒன்று இருந்துள்ள போதிலும், அதன் செயற்பாடுகள் போதுமானளவுக்கு மக்களைச் சென்றடையவில்லை. நல்லிணக்க முயற்சிகளில் இந்த அமைச்சுக்குள்ள பாத்திரமும் முக்கியமானது.
இனவாதத்தைக் கிளப்பக்கூடிய உரைகள் சகவாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்திருப்பதையும் அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. இனவாதத்தைக் கிளப்பி அதில் அரசியல் நடத்துவதற்கு சிலர் முற்பட்டிருக்கின்றார்கள். இவற்றை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026