Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 மே 31 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் மலேரியா நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர். எம்.எம். நௌஷாத் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு மலேரியா நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு செவ்வாய்க்கிழமை (30) அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலேரியா கட்டப்பாடு தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் பொது மக்களுக்கு மலேரியா நோய் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.எப்.ஏ. காதர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago