2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லோவைப் பிரதியிடவுள்ள பிளிச்

Shanmugan Murugavel   / 2021 மே 26 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரையடுத்து, ஜேர்மனி பயிற்றுவிப்பாளராக ஜோச்சிம் லோவை, அந்நாட்டின் புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்னாள் முகாமையாளர் ஹன்ஸி பிளிச் பிரதியிடவுள்ளார்.

ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளராக 2006ஆம் ஆண்டு முதல் லோ இருக்கின்ற நிலையி, 2024ஆம் ஆண்டு வரையில் ஜேர்மனி முகாமையாளராகவிருக்கும் ஒப்பந்தமொன்றில் பிளிச் கைச்சாத்திட்டுள்ளார்.

ஜேர்மனியுடன் லோவின் உதவியாளராக 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிளிச் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .