2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்;பெண் யாருனு தெரியுமா

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், 5 முறை மட்டுமே இவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் தரப் போட்டியில் கோவா அணிக்காக 2022ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

மிகவும் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வாக நடைபெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .