R.Tharaniya / 2025 மே 18 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர் 16 முதலாமிடங்கள், 14 இரண்டாமிடங்கள்,18 மூன்றாமிடங்கள் அடங்கலாக மொத்தமாக 48 வெற்றியிடங்களைப் பெற்று பிரகாசித்துள்ளனர்.
பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாத்தீமின் தலைமையில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக்கின் அயராத பெரு முயற்சியால் மாணவர் இவ் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
மேற்படி போட்டிகளில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றவர்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள வலயமட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்


3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago