R.Tharaniya / 2025 ஜூன் 26 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு கோடைகால தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, 06 தங்கப் பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் வியாழக்கிழமை (26) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் கடந்த சனிக்கிழமை (21)அன்று முதல் புதன்கிழமை (25) வரை நடைபெற்றது, இதில் உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் ருசிரு சதுரங்க 2 தங்கப் பதக்கங்களையும், நெத்மிகா ஹேரத் 2 தங்கப் பதக்கங்களையும், வக்ஷன் வினயராஜ் மற்றும் நிமாலி லியனாராச்சி ஆகியோர் தலா 1 தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.
அதேபோன்று வத்சலா ஹப்புஆராச்சி, அயோமல் அகலங்க, வக்ஷனா வினயராஜ் மற்றும் நிமாலி லியனாராச்சி ஆகியோர் தலா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. கூடுதலாக, சஃப்ரின் அகமது வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தப் போட்டியில் 08 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று 11 பதக்கங்களை வென்றனர்.

டி.கே.ஜி. கபில
6 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
30 minute ago
37 minute ago