2021 ஜூலை 28, புதன்கிழமை

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 மே 23 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், முஷ்பிக்கூர் ரஹீமின் 84 (87), மகமதுல்லாவின் 54 (76), அணித்தலைவர் தமிம் இக்பாலின் 52 (70), அஃபிஃப் ஹொஸைனின் ஆட்டமிழக்காத 27 (22) ஓட்டங்களோடு, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா 3, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, லக்‌ஷன் சந்தகான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 258 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக வனிடு ஹஸரங்க மாத்திரமே 74 (60) ஓட்டங்களைப் பெற்றதுடன், வேறெவரும் நிலைத்து நிற்காமல், மெஹிடி ஹஸன் மிராஸிடம் 4, முஸ்தபிசூர் ரஹ்மானிடம் 3, மொஹமட் சைஃபுடீனிடம் 2, ஷகிப் அல் ஹஸனிடம் ஒரு விக்கெட்டைப் பறிகொடுத்து, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களையே பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ரஹூம் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .