2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

வென்ற இஹ்ஸான் சுப்பர் லெஜன்ஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 23 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

ஓட்டமாவடி, பதுரியா, மாஞ்சோலை இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர்களுக்கிடையில் அல் ஹிரா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வருடாந்த இஹ்ஸான் அல்ரா லெஜன்ஸ் அணிக்கு  எதிரான போட்டியில், இஹ்ஸன் சுப்பர் லெஜன்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் லெஜன்ஸ், 15 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அமீர் மூன்று ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு, 204 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு அல்ரா லெஜன்ஸ் 14.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150  ஓட்டங்களையே பெற்று 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், நஜீம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக, நஜீம் தெரிவானார்.

இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ. றிபாஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி போட்டியில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீரர்களுக்கு கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .