Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 26 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையானது, இரு தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஒன்றை முதற் தடவையாக பங்களாதேஷிடம் இழந்துள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், மிர்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையையடுத்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், முஷ்பிக்கூர் ரஹீமின் 125 (127), மகமதுல்லாவின் 41 (58) ஓட்டங்களோடு, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், துஷ்மந்த சமீர, லக்ஷன் சந்தகான் ஆகியோர் தலா மூன்று, இசுருதான இரண்டு, வனிடு ஹஸரங்க ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு, 247 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஷொரிபுல் இஸ்லாம் (1), முஸ்தபிசூர் ரஹ்மான் (3), ஷகிப் அல் ஹஸன் (2), மெஹிடி ஹஸன் மிராஸிடம் (3) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து மழை குறுக்கிட்டபோது 38 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பின்னர் 40 ஓவர்களில் 245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கானது டக்வேர்த் லூயிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களையே பெற்று, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 103 ஓட்டங்களால் இலங்கை தோற்றிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக ரஹீம் தெரிவானார்.
57 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
7 hours ago