2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

கபடி சம்பியன்ஷிப்புக்காக பங்களாதேஷ் பயணமான நிந்தவூர் அஸ்லம் சஜா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 28 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.என்.எம். அப்ராஸ்

அம்பாறை மாவட்டம் நிந்தவூரை சேர்ந்த எம்.டி .அஸ்லம் சஜா, பங்களாதேஷில் நடைபெறும் சர்வேதேச கபடி சம்பியன் ஷப் போட்டிக்காக இலங்கை தேசிய கபடி அணியை பிரதிநிதித்துவபடுத்தி பங்களோதேஷ் பயணமானர்.

குறித்த போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளதுடன், ஐந்து நாடுகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜாவுக்கு அனைத்துக்கும் பயிற்சிகளை வழங்கி, வழிகாட்டி உறுதுணையாக இருக்கின்ற மதீனா விளையாட்டுக் கழக செயலாளரும் அம்பாறை மாவட்ட கபடி சம்மேளனத்தின் செயலாளரும் ஆசிரியருமான எஸ். முகம்மட் இஸ்மத், மதீனா விளையாட்டு கழக நிர்வாகிகள்ஏனைய  கபடி துறையின் முன்னேற்றத்துக்கு   ஒத்துழைக்கும் அனைவரும்  இவர் இலங்கை சார்பாக இப்போட்டியில் கலந்துகொண்டு சிறந்த பெறுபேற்றை பெற்று
வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .