2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

246 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 மே 25 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI) 246 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் தமிம் இக்பால், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

பங்களாதேஷ் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய மொஹமட் மிதுனை மொஷாடெக் ஹொஸைன் பிரதியிட்டதுடன், தஸ்கின் அஹ்மட்டைப் பிரதியிட்டு ஷொரிஃபுல் இஸ்லாம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ், இரண்டாவது ஓவரிலேயே அணித்தலைவர் தமிம் இக்பால், ஷகிப் அல் ஹஸனை துஷ்மந்த சமீரவிடம் இழந்தது.

அந்தவகையில், அடுத்து வந்த முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ் ஆகியோர் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 25 (42) ஓட்டங்களுடன் லக்‌ஷன் சந்தகானிடம் தாஸ் வீழ்ந்ததுடன் தொடர்ந்து வந்த மொஷாடெக் ஹொஸைனும் குறிப்பிட்ட நேரத்தில் சந்தகானிடம் வீழ்ந்தார்.

பின்னர், ரஹீம், மகமதுல்லா இணைந்து இனிங்ஸை கட்டியெழுப்பிய நிலையில், மகமதுல்லா 41 (58), அஃபிஃப் ஹொஸைன், மெஹிடி ஹஸன் மிராஸ் ஆகியோர் சந்தகான், இசுரு உதான, வனிடு ஹஸரங்கவிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் வீழ்ந்தனர்.

எவ்வாறெனினும் ரஹீம் தனித்து நின்று போராடி சதத்தைப் பூர்த்தி செய்ய, மறுபக்கத்தில் மொஹமட் சைபுடீன் ரண் அவுட்டானதுடன், ஷொரிஃபுல் இஸ்லாம் உதானவிடம் விழ, 125 (127) ஓட்டங்களுடன் ரஹீமும் சமீரவிடம் விழ, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .