2025 நவம்பர் 05, புதன்கிழமை

49வது தேசிய விளையாட்டுப் போட்டி

R.Tharaniya   / 2025 ஜூன் 03 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

49 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான காற் பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடரில் புத்தளம் பிரதேச செயலக அணி சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

இந்த போட்டி தொடர் அண்மையில் புத்தளம் மாவட்டம் மாராவில சென் செபஸ்தியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டி தொடரில் புத்தளம், சிலாபம், வென்னப்புவ, நாத்தாண்டிய, தங்கொட்டுவ, கல்பிட்டி ஆகிய 06 பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில் புத்தளம் பிரதேச செயலக அணியும், வென்னப்புவ பிரதேச செயலக அணியும் எதிர்கொண்டதில் 03 கோல்களினால் புத்தளம் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று புத்தளம் மாவட்ட சம்பியனாக தகுதி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புத்தளம் பிரதேச செயலக அணியானது அடுத்து வரும் அகில இலங்கை ரீதியான மாவட்ட அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளது.

புத்தளம் பிரதேச செயலக அணியினை புத்தளம் விளையாட்டு அதிகாரி சுமித் வழி நடத்தி இருந்தார்.புத்தளம் நகர சிரேஷ்ட கால்பந்தாட்ட வீரர்கள் இதற்கு உதவியாக செயற்பட்டனர்.

எம்.யூ.எம்.சனூன்
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X