R.Tharaniya / 2025 நவம்பர் 26 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் மேம்பாட்டை முன்னிட்டு Ride for Ceylon 10வது ஆண்டு சைக்கிள் ஓட்ட நிகழ்வை முன்னெடுக்க ஆயத்தமாகிறது.
உலகளவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டு பெற்ற Ride for Ceylon சைக்கிள் ஓட்ட முன்னேற்பாடானது,எதிர்வரும் 2026 மார்ச் 11 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அதன் 10வது ஆண்டு நிறைவு சைக்கிள் ஓட்டம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளது.
நான்கு நாட்கள் உள்ளடங்களாக 450 கி.மீ தூரம் கொண்டுள்ள இச் சைக்கிள் ஓட்ட நிகழ்வானது,சர்வதேச ரீதியில் பல சைக்கிள் ஓட்டுனர்களை ஒன்றினைத்து,மானிப்பாய் கிறீன் மெம்மோறியல் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காக நிதி திரட்டும் ஓர் தொண்டாற்று பயண நிகழ்வாக அமைகிறது.
மாற்றத்தின் பாரம்பரியமும் உலகளாவிய ஒற்றுமையும்
2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராட்சியத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் தொண்டாற்று நிறுவனமான Friends Of Manipay Hospital (FOMH) ஐ சேர்ந்த 6 அர்ப்பணிப்பான தன்னார்வத் தொண்டர்களினால் Ride for Ceylon என்னும் இச் சைக்கிள் ஓட்ட நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு இன்று உலகலாவிய ரீதியில் ஓர் விளையாட்டு சுற்றுலா நிகழ்வாக மலர்ந்துள்ளது.
இந் நிகழ்வானது இங்கிலாந்து, ஆவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா,கனடா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள சைக்கிள் ஓட்டுனர்களை கவர்ந்துள்ளது.
2024ம் ஆண்டில் 75 சர்வதேச சைக்கிள் ஓட்டுனர்கள்; உள்ளடங்களாக இந் நிகழ்வு நடைபெற்றிருந்தது ஓர் குறிப்பிடதக்க விடயமாகும். அந் நிகழ்வு இலங்கை நாட்டின் கலாச்சார செழுமை மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தியது.
இம் முயற்சியாது முதலில், Ealing மருத்துவமனையின் குடலியல் பிரிவின் சிரேஷ்ட ஆலோசகரான டாக்டர் ஜெயந்தஆர்னோல்ட் மற்றும் BBK Partnership Chartered Accountants நிறுவனத்தின் சிரேஷ்ட பங்காளருமான திரு ஆனந்தன் ஆர்னோல்ட் ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டிலிருந்து தமது சிறுபராயத்தில் நன்கு அறிந்த மருத்துவமனையான மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலை,பராமரிப்பின்றி கைவிடப்பட்டு மூடப்பட்ட நிலையில் உள்ளதை அறிந்து,அதனை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது.
மானிப்பாய் கிறீன் மெமோரியல் மருத்துவமனையின் மறுசீரமைப்பு மற்றும் அதன் செயற்பாட்டிற்கும்,உள்ளுர் செயலாக்க இணை நிறுவனமான Institute Of MedicalScience (IMS) - மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் அபிவிருத்திக்கும் நிதி சேகரிப்பதே இதன் பின்னனியில் உள்ள ஓர் அசைக்க முடியாத முக்கிய நோக்கமாகும்.
இலாப நோக்கற்ற அமைப்பாக செயல்படும் இந்த மருத்துவ மனையானது,அடிப்படை சேவைகளை வழங்குவதுடன் நரம்பியல் வேறுபாடு சார்ந்த குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பராமரிப்பையும் வழங்குகிறது. எதிர்காலத்தில் ஆரம்பகால புற்றுநோயை கண்டறியும் சிகிச்சை மையம் ஒன்றினை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் சேகரிக்கப்படும் நிதியானது வெளிப்படையான முறையில் சேர்க்கப்பட்டு,மருத்துவமனையின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி பயன்படுத்தப்படுவதன் மூலம் அதன் அதிகபட்ச பயனை உறுதி செய்கிறது.
மேலும் FMOH தொண்டாற்று நிறுவனத்தினால் வழங்கப்படும் அபிவிருத்தி நிதியானது,வைத்தியசாலையில் உயர்தர சேவைகளை பேணி வழங்குவதற்கும் அதன் செயற்பாட்டிற்குமான செலவுகளை குறைக்க உதவுகிறது.
10வது ஆண்டு விழா....
2026ம் ஆண்டிற்கான Ride for Ceylon 10 வது சைக்கிள் ஓட்டமானது,மார்ச் 10ம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் வெகு விமரிசையான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.
இவ் அறிவிப்பானது நவம்பர், 25ம் திகதி அன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ் ஊடக மாநாட்டில் பணிப்பாளரான நிஷந்தன் அபேரத்ன மற்றும் ஷரோமல் டி சில்வா ஆகியோர் பங்கேற்று 10வது ஆண்டு Ride forCeylon சைக்கிள் ஓட்டத்தின் மைக்கல்லிற்கான இலக்கினை அறிவித்ததுடன் அதன் அதிகாரபூர்வ ஓட்டத்திற்கான ரீ-சேட் இனையும் பிரதான இணை அனுசரனையாளர்களையும் அறிமுகம் செய்துவைத்தனர்.
மேலும் திரு.நோயல் யோசப்,திரு.பவன் சவுன்,பாரிஸிலிருந்து யாழ்ப்பாணம் வரை மூன்று மாதங்களில் 10,000 கி.மீக்கு மேற்பட்ட தூரத்தை 12க்கும் மேற்பட்ட நாடுகள் ஊடாக கடந்து சைக்கிள் பயணம் செய்த இளம் சவாரி வீரரான திரு இனோசுரன் மற்றும் மிஸஸ் ஸ்ரீ லங்கா பட்டத்தை பெற்ற வரும் லாஸ் வேகஸில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவருமான திருமதி அமண்டா இஷதி ஆகியோர் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
10 வது சைக்கிள் றைட் முகாமைத்துவத்தால் நடாத்தப்படும் இந் நிகழ்வு,அனைத்து பங்கேற்பாளர்களுக்குமான பாதுகாப்பு மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை உறுதிப்படுத்த - இருப்பிட ஒழுங்குவசதி,உணவு,மருத்துவம் மற்றும் பயணஆதரவு உள்ளிட்ட முழுமையான ஏற்பாடுகளை சீரான முறையில் வழங்க உறுதி செய்துள்ளது.
இப் பயணத்தின் முழுத் தூரத்தினை முழுமையாக நிறைவு செய்து,நாட்டின் சுகாதார சமநிலை,சமூகமேம்பாடு,மற்றும் நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதே வீரர்களுக்கான முக்கிய சவாலாக அமைகிறது.
அத்துடன் FOMH குழுவின் அறங்காவலரானஆனந்தன் ஆர்னோல்ட் இந் சைக்கிள் ஓட்ட நிகழ்வின் இரட்டைபணி நோக்கினை வலியுறுத்தியுள்ளார். 'சக்கரங்களை திருப்புவதன் மூலம் வாழ்க்கையை மாற்றுதல் Ride for Ceylon ஆகும். 10 ஆண்டுகளாக இந்த சைக்கிள் ஓட்டப்பயணமானது ஓரு உடல் சவாலை விட,உலகளாவிய ரீதியில் ஒற்றுமையை வெளிப்படுத்தி சுகாதார சமத்துவத்ததை பேணும் ஓர் சக்தியாக அமைந்துள்ளது.
கொழும்பில் இருந்து மானிப்பாய் வரைக்குமான ஒவ்வொரு சைக்கிள் மிதிப்பும் இன்றியமையாத இலாபநோக்கற்ற சுகாதார சேவைகள்,சமூக மேம்பாடு மற்றும் வடக்கில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நிதியளித்து பெரும் பங்குவகிக்கிறது.
Ride for Ceylon தற்போது உலகளாவிய ரீதியில் தொழில்சார் வல்லுநர்கள்,விளையாட்டுவீரர்கள், தூதரகபிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினர் போன்ற பலரது கவனத்தை ஈர்த்து அதன் நோக்கினையும் முக்கியத்துவத்தினையும் பெற்றுள்ளது.
நிகழ்வு ஓரே பார்வையில்
● நிகழ்வு: Ride for Ceylon 10வது ஆண்டுசைக்கிள் ஓட்டம்.
● திகதிகள்:2026,மார்ச் 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை
● தூரம்:கொழும்பு முதல் மானிப்பாய்,யாழ்பாணம் (450கிமீ)
● 10வது ஆண்டு மற்றும் ஆரம்பவிழா:10ம் திகதி,மார்ச் 2026. சினமன் லேக்சைட்கொழும்பு.
தொடர்புவிபரங்கள்:
● ஊடகதொடர்பு (இங்கிலாந்து): மீராஆர்னோல்ட் 44 7956 606688
● ஊடகதொடர்பு (இலங்கை): ஜெரோமினா 94 704 111110










7 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago