R.Tharaniya / 2025 மே 18 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸ் இழந்தது.
பெங்களூருவில் சனிக்கிழமை (17) நடைபெறவிருந்த றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையிலேயே தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை நைட் றைடர்ஸ் இழந்தது.
இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 12 புள்ளிகளை நைட் றைடர்ஸ் பெற்றுள்ள நிலையில் அதிகபட்சமாக அவ்வணி 14 புள்ளிகளையே பெற முடியுமென்ற நிலையில் ஏற்கெனவே மூன்று அணிகள் நைட் றைடர்ஸை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன்,
மற்றைய அணிகளும் நைட் றைடர்ஸை விட அதிக புள்ளிகளைப் பெறக்கூடிய வகையில் உள்ளது.
இந்நிலையில் லக்னோவில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.

31 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago