R.Tharaniya / 2025 மே 15 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கற்பிட்டி கோட்ட மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கண்டல் குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் நான்கு முதலாம் இடத்தினையும், இரு இரண்டாம் இடத்தையும், ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்று மொத்தமாக 27 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் கற்பிட்டி கோட்ட மட்ட தரப்படுத்தலில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் எட்டாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம் ஜெசீம் தெரிவித்துள்ளார்.
இருபது வயதுக்கு கீழ், பிரிவில் ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் எம்.எப். நப்ரினா முதலாம் இடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
18 வயதின் கீழ் ஈட்டி எறிதல் போட்டி மற்றும் தட்டு எறிதலில் எப். றீஹா முதலாம் இடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் எப். இமானி இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலையின் வரலாற்றில் சாதனையை நிலைநாட்டி பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய விளையாட்டு துறை ஆசிரியர் எஸ்.ஐ.எம். அம்ஜத் மற்றும் எம். அஹ்ஷாப் ஆகியோருக்கும் அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இம் மாணவர்கள் அனைவரும் புத்தளம் வலய மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago